வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025

குடும்ப குத்துவிளக்கு சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது.? மாடர்ன் உடையில் மஜாவான புகைப்படம்

விஜய் டிவியின் ஜூனியர் மற்றும் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கள் திறமையினால் திரைப்படங்களிலும் படுவதற்கான வாய்ப்பைப் பெற்று முன்னணி பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய பெருமைக்குரிய விஜய் டிவி ஜூனியர் மற்றும் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது உலக அளவில் புகழ் பெற்றது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நான்காவது சீசனில் இரண்டாவது இடம் பிடித்தவர் தான் ஜெசிக்கா. இவர் பூர்வீகம் யாழ்ப்பாணம் என்றாலும் தற்போது இவர் வாழ்வது கனடா வாழ் ஈழத்தமிழர்.

இவருடைய தற்போதைய புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் ஜெசிக்கா செம க்யூட்டாக நடிகை போலவே காட்சி அளிக்கிறார். ஏனென்றால் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும்போது சின்ன பெண்ணாக இருந்த ஜெசிக்கா, இப்போது வளர்ந்து இளம்பெண்ணாக மாறி உள்ளார்.

jessica-cinemapettai
jessica-cinemapettai

இவர் சமீபத்தில் ஞானம் எழுதி, அக்னி கணேஷ் இசையமைத்த ‘சரவண பொய்கை என்ற பாடலை பாடி உள்ளார். அதைப்போல் சில வருடங்களுக்கு முன்பு ஜெசிக்கா அன்னையர் தினம் என்று பாடிய ‘உயிரும் நீயே’ என்ற வீடியோ பாடலானது கடைக்கோடி ரசிகர்களையும் ஈர்த்தது.

எனவே இனிவரும் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் ஜெசிக்காவின் பாடல் வலம்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அத்துடன் ஜெசிக்கா அவ்வபோது என்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகளை பெற்று வருகிறார்.

Trending News