வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இப்பதான் அண்ணாமலைக்கு ரோஷம் வந்திருக்கு, விஜயாவுக்கு வச்சா ஆப்பு.. ரோகிணி திருடியதை கண்டுபிடிக்க போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், நான் வச்ச இடத்தில் பணத்தை காணும் என்று பார்வதி, விஜயாவிடம் சொல்கிறார். உடனே விஜயா பீரோல் முழுவதையும் தேடிப் பார்க்கிறார். பிறகு பணம் காணும் என்றதும் மீனா வந்துட்டு போனதும் தான் பணம் காணாமல் போய் இருக்கிறது. அதனால் நிச்சயம் மீனாதான் பணத்தை திருடி இருக்கணும் என்று விஜயா முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் வீட்டுக்கு போன விஜயா, எதேர்ச்சியாக பார்வதிக்கு போன் பண்ணி பேசுவது போல் போன் பண்ணுகிறார். அப்பொழுது பார்வதியை பேசவிடாமல் விஜயா என்னது வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபா பணத்தை காணுமா? எப்படி காணாம போச்சு யார் வந்தா? என்னது உனக்கு மீனா மீது சந்தேகம் வருகிறதா? அவள் தான் கடைசியா வந்துட்டு போனாளா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அனைவரையும் மீனா தான் திருடியிருப்பார் என்பது போல் நம்ப வைக்கிறார்.

இப்படி விஜயா பேச பேச மீனா வழக்கம் போல் அழ ஆரம்பித்து விடுகிறார். பிறகு விஜயா மட்டும் தான் மீனா பணத்தை திருடி இருப்பாள் என்று சந்தேகப்பட்டு பேசுகிறார். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மீனா திருடியிருக்க மாட்டார் என்று மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள். ஆனாலும் மீனா மொட்ட மாடியில் நின்று அழ ஆரம்பித்து விட்டார்.

பிறகு முத்து, மீனாவை சமாதானப்படுத்தி என்ன நடந்துச்சு என்று நான் உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறார். இதனை தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்வதற்காக முத்து, பார்வதி அத்தை வீட்டுக்கு போகிறார். அங்கே போனதும் உங்க வீட்டில் பணத்தை காணவில்லை என்பதற்காக நீங்கள் மீனா மீது சந்தேகப்படுகிறீர்களா என்று கேட்கிறார்.

அதற்கு பார்வதி, அப்படிலாம் நான் சந்தேகப்பட்டு சொல்லவே இல்லை. முதல்ல அது என்னுடைய பணம் இல்லை உங்க அம்மாவுடைய பணம் தான் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். அதற்கு முத்து அம்மாவுக்கு எது அவ்ளோ பணம், எப்படி வந்தது என்று கேட்க ஆரம்பித்து விட்டார். அப்பொழுது வேறு வழி இல்லாத பார்வதி நடந்த அனைத்து உண்மையும் சொல்லிவிடுகிறார்.

நீ சத்யா கேசை வாபஸ் வாங்குவதற்காக லாயருக்கு கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வாங்கி தான் உங்க அம்மா கேசை வாபஸ் வாங்கினார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். பிறகு இந்த உண்மையை தெரிந்து கொண்ட முத்து அப்படியே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் சொல்லி விடுகிறார்.

உடனே அண்ணாமலை, விஜயாவை கூப்பிட்டு நீ பண்ணுன வேலைக்கு முத்து மற்றும் மீனா 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி லாயருக்கு கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் நீ இரண்டு லட்ச ரூபாய் ஆட்டையை போட்டு இருக்கிறாய். நீ செய்த இந்த திருட்டு வேலைக்கு மீனா முத்து வாங்கின மொத்த அஞ்சு லட்ச ரூபா பணத்தை நீ தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி சரியாக ஆப்பு வைத்து விட்டார்.

இப்பொழுது தான் அண்ணாமலை முதல்முறையாக நல்ல ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அடுத்ததாக பார்வதி அத்தையிடம் வீட்டிற்கு யாரெல்லாம் வந்தாங்க பணம் இருப்பது யாருக்கெல்லாம் தெரியும் என்று முத்து கேள்வி கேட்கப் போகிறார். அப்பொழுது பார்வதி யோசித்துப் பார்த்த நிலையில் ரோகிணி வந்தாள். ரோகினிடம் எல்லா உண்மையும் சொல்லி பணத்தையும் எடுத்துக் காட்டினேன் என்று சொல்லப் போகிறார்.

அந்த வகையில் இந்த விஷயத்தில் முத்துவுக்கு நேரடியாக ரோகினி மீது தான் சந்தேகம் வரப்போகிறது. அடுத்து ரோகிணியை கையும் களவுமாக பிடிக்கும் விதமாக முத்து பிளான் பண்ணி ரோகினி திருடிய விஷயத்தை கண்டுபிடிக்க போகிறார். இனி தான் இந்த நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க போகிறது என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனாவுக்கு ஏற்ற மாதிரி கதை மாறப் போகிறது.

Trending News