சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

42 வயதை தாண்டியும் ஜோதிகா, சிம்ரனுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை.? இளம் நடிகைகள் தெரிஞ்சுக்க வேண்டிய சீக்ரெட்!

தமிழ் சினிமாவில்  இன்று பல நடிகைகளும் பல்வேறுவிதமான சாதனைகளை படைத்து பல விருதுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் 10 வருடத்திற்கு முன்பு பணியாற்றிய  2 நடிகைகள் மட்டும் இன்றுவரை தேசிய விருது  வாங்காதற்கு காரணம் உள்ளது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

அதாவது ஒரு காலத்தில் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்த நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகா. இவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நடிகையாக வலம் வந்தனர்.

என்னதான் ரசிகர்களுக்கு நடிகைகளை பிடித்தாலும் அவர்களுக்கும் திறமை இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்கள். அப்படி ஒரு சில படங்களில் இவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கதால் அந்த படங்கள் தோல்வி அடைந்தன.

simran jyothika
simran jyothika

என்னதான் ஒரு படங்கள்  தோல்வியடைந்தாலும் இவர்கள் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் பார்த்துவிட்டு கண்டிப்பாக இவர்களுக்கு விருது கிடைக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

அதாவது ஜோதிகாவிற்கு சந்திரமுகி  படத்தில் நடிப்பை பார்த்து கண்டிப்பாக இவர் தேசிய விருது வாங்குவார் என எதிர்பார்த்தனர். அதேபோல் சிம்ரனுக்கு கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் இவரது நடிப்பிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும்  100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை  ஒரு தேசிய விருது கூட வாங்கவில்லை, அதற்கு காரணம் இவர்கள் நடிக்கும் படங்களில் இவர்கள் டப்பிங் பேசியதில்லை, அதனாலேயே ஒரு சில படங்களில் இவர் கிடைக்க வேண்டிய விருதுகள் கிடைக்கவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

Trending News