
Jyothika: வனத்தில் இறையெடுத்தாலும் கடைசியில் இனத்தோடு சேர்ந்து விட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் ஜோதிகா கச்சிதமாக செய்திருக்கிறார்.
காதலுக்கு மரியாதை இந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜோதிகா. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததால் ஜோதிகாவை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.
நெபோட்டிசம் செல்வாக்கில் திளைக்கும் ஜோ
அந்த தமிழ் சினிமாவே வேண்டாம் என மும்பை பக்கம் ஒதுங்கினார் ஜோதிகா. இப்போது பாலிவுட் உலகம் அவரை தங்க கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறது.
தொடர்ந்து படங்கள் மற்றும் வலைத்தொடர் வாய்ப்புகள் ஜோதிகாவுக்கு குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஜோதிகாவுக்கு முன்னாடியே நயன்தாரா பாலிவுட் உலகில் காலடி எடுத்து வைத்தார்.
ஜவானுக்குப் பிறகு நயன்தாராவுக்கு பாலிவுட் உலகில் எந்த பட வாய்ப்பு இல்லை. இதற்கெல்லாம் காரணம் நெபோட்டிசம் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
ஜோதிகா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில். அதனால் தான் தன்னுடைய சொந்த ஊர் பெண் என்பதால் பாலிவுட் உலகம் அவருக்கு விசாலமான இடத்தை வழங்கி இருக்கிறது.
நயன்தாரா தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் வந்த வழியே திரும்பி போங்கள் என்று அனுப்பி இருக்கிறார்கள்.