திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

ஜோதிகா நடிக்கும் பொழுதே அவரது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தார். பல முக்கிய நடிகர்களுடன் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று திருமண வாழ்க்கையில் முழுமையாக இவரை அர்ப்பணித்து வந்தார்.

இதனை அடுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு மறுபடியும் நடிப்பதில் ஆர்வம் காட்டி தொடர்ந்து படங்களை நடித்து வந்தார். அத்துடன் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு முக்கியமான கதாபாத்திரமாகவும் பெண்களை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டு இருக்கும். அத்துடன் இவர் ஹீரோயின் சப்ஜெக்ட் ரோலிலும் நடித்து வருகிறார்.

Also read: முதல் தேசிய விருது வாங்கிய சூர்யா, ஜோதிகா.. வைரலாகும் புகைப்படம்

இதனை அடுத்து இவருக்கு மற்ற மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. இப்பொழுது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக “காதல் தீ கோர்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்ததாக ஹிந்தியிலும் “ஸ்ரீ” என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இதற்காக இப்பொழுது மும்பையில் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.  இவருக்காக இப்பொழுது குடும்பத்தோடு அனைவரும் மும்பையில் தங்கி உள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Also read: நடிப்பின் ராட்சசி என ஜோதிகா நிரூபித்த 8 படங்கள்.. வாழ்நாளில் மறக்க முடியாத சந்திரமுகி

இதனை அடுத்து ஹிந்தியில் “தாபா கார்டல்” என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரிலும் இவர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த வெப் தொடரில் இவருடன் பிரபல இந்தி நடிகை ஷாபனா ஆஸ்மி மற்றும் இந்தி நடிகர் சுராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தத் தொடரை சோனாலி போஸ் இயக்குகிறார். இது ஐந்து குடும்பப் பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் அக்கட தேசத்தில் இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். திருமணத்திற்கு பின்னும் அதிக அளவில் பிஸியாகி நடித்து வருகிறார்.

Also read: ஜோதிகா சர்ச்சை பேச்சால் நிகழ்ந்த மேஜிக்.. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துருச்சு, குவியும் பாராட்டு

Trending News