ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மீண்டும் குண்டு பூசணிக்காய் போல் மாறிய ஜோதிகா.. செம வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா மீண்டும் சினிமாவுக்கு வந்தபோது மாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி விஜய்யின் மெர்சல் படத்தை நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ? என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் தான் ஜோதிகா. அந்த படம் ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்த ஜோதிகா பெரும்பாலும் மாஸ் நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

அது குறித்து கேட்டதற்கு மாஸ் படங்களில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எனவும், இனிமேல் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் பல படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாகி வருகின்றன. பெரும்பாலும் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா சொந்தமாகவே தயாரித்து வருகிறார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று படத்தை ஹிந்தியிலும் சூர்யா சொந்தமாக தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த புகைப்படத்தில் ஜோதிகா இருந்தார். அதில் ஜோதிகா கொஞ்சம் உடல் எடை கூடி பழையபடி குண்டு பூசணிக்காய் போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

jyothika-latest-photo
jyothika-latest-photo

Trending News