புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Jyothika: சமூகப் பொறுப்பு பத்தி பேசுற நீங்க ஏன் ஓட்டு போடல.? பூசி மழுப்பி ஜோதிகா சொன்ன பதில்

Jyothika: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என ஒட்டுமொத்த பிரபலங்களும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். அதேபோல் அனைத்து நடிகைகளும் ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

ஆனால் சமூக விஷயங்களைப் பற்றி பேசும் குடும்பத்தின் மருமகளான ஜோதிகா ஓட்டு போடவில்லை. இது அப்போதே பெரும் சலசலப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

ஜோதிகாவின் மழுப்பல் பதில்

இந்நிலையில் ஸ்ரீகாந்த் பட விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் ஒரு நிருபர் சமூக பொறுப்பு பற்றி பேசும் நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை என கேட்டார்.

இதை எதிர்பார்க்காத ஜோதிகா பூசி மழுப்புவது போல் ஒரு பதில் கொடுத்து இருந்தார். அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் நான் தவறாமல் ஓட்டு போடுவேன்.

சில சமயங்களில் வெளியூர் செல்ல நேரிடும். அதே போல் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் அதற்கு தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய இந்த பதிலை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜோ தேவையில்லாமல் சமாளிக்கிறார். மும்பை போய் செட்டில் ஆனதிலிருந்து அவர் தமிழ்நாட்டை மறந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News