90 களின் பிற்பகுதியில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா இப்போது வரை பல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லப்பட்டாலும் சந்திரமுகி திரைப்படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்திய இவர் அதன் பிறகு கதையின் நாயகியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இடையில் திருமணம், குழந்தைகள் என பிரேக் எடுத்திருந்த ஜோதிகா தற்போது முழு வீச்சில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் உடன்பிறப்பே திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் காதல் என்ற திரைப்படத்திலும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.
Also read: அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள் தியா.. குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்
இந்நிலையில் அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ள போட்டோ ஒன்று இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஜோதிகா எப்போதுமே தன்னுடைய அழகில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார். அதனால் தான் தற்போது 44 வயதான போதும் அவர் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
புது ஹேர் ஸ்டைலில் ஜோதிகா
![jyothika-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/02/jyothika-cinemapettai.jpg)
அந்த வகையில் தற்போது அவர் தன் ஹேர் ஸ்டைலை ரொம்பவும் க்யூட்டாக மாற்றி இருக்கிறார். அதை பார்க்கும் போது பார்பி டால் போன்று அவ்வளவு அழகாக இருக்கிறது. இதைப் பார்த்த பலரும் குட்டி பொண்ணு போல செம க்யூட்டா இருக்கீங்க, உங்களுக்கு இரண்டு பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பவே முடியாது என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.
Also read: சத்தமே இல்லாமல் வேலை பார்த்துள்ள ஜோதிகா.. நயன்தாராவுக்கு இணையாக ஒரு ரவுண்ட் வரப்போறாங்க
உண்மையில் இந்த பாராட்டுகளுக்கு ஜோதிகா தகுதியானவர் தான். ஏனென்றால் அவருக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். அதில் அவருடைய மகள் தியா அம்மாவையே மிஞ்சும் அளவுக்கு நெடு நெடுவென வளர்ந்து நிற்கிறார். தற்போது 15 வயதாகும் தியா வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்.
பார்பி டால் போல் ஜொலிக்கும் ஜோதிகா
![jyothika-actress](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/02/jyothika-actress.jpg)
சமீபத்தில் கூட அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ஏனென்றால் அதில் அவர் ஹீரோயினுக்கு உண்டான அனைத்து தகுதிகளையும் கொண்டு அவ்வளவு அழகாக இருந்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி ஆயிட்டாங்க என்று கூறி வந்தனர். இந்நிலையில் ஜோதிகாவும் தன் மகளுக்கு அக்கா போன்று மாறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also read: இந்த நடிகையுடன் நீங்க நடிக்கக் கூடாது.. சூர்யாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா