திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

Thalapathy 68-Jyothika: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு இப்போதே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதை அதிகப்படுத்தும் வகையில் படத்தில் நடிக்கப் போகும் நட்சத்திரங்களின் பட்டியலும் வேற லெவல் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா விஜய் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவருடைய கேரக்டர் பற்றிய தகவலும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

Also read: ஜோதிகா எல்லாம் வேண்டாம், 28 வயது நடிகையை புக் செய்த வெங்கட் பிரபு.. தளபதி 68ல் இணைந்த ஹீரோயின்

அதாவது இப்படத்தில் ஜோதிகா முதலமைச்சராக நடிக்கிறாராம். அதுவும் அரசியலுக்காக தன் காதலனையே கொல்லும் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் அவர் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் திரிஷாவும் இப்படி ஒரு வில்லியாக தான் நடித்திருப்பார்.

அதாவது பதவி ஆசைக்காக தன் காதலனையே கத்தியால் குத்தி கொல்லும் கேரக்டரில் திரிஷா மிரட்டி இருப்பார். அது அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அந்த வகையில் ஜோதிகா இதற்கு முன்பே வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் தளபதி 68 அவருடைய நடிப்பு பசிக்கான சரியான தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

மேலும் அரசியல் கலந்த கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஜோதிகாவின் தங்கையாக வரும் பிரியங்கா மோகன் இளவயது விஜய்யிடம் மியூசிக் கற்கும் மாணவியாக நடிக்கிறாராம். அதே போன்று ஜெய் இதில் நடிகராகவே வர இருக்கிறார்.

அது மட்டுமின்றி சிம்பு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த வகையில் க்ரைம், அரசியல் பாணியில் பழிவாங்கும் ஒரு கதையாக உருவாகும் தளபதி 68 தனுஷின் கொடி பட சாயலையும் உள்ளடக்கி உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குது இல்லையோ, தளபதி 68 உறுதி.. 2 பெரிய கையை வளைத்து போட்ட வெங்கட் பிரபு

Trending News