சூர்யா விட 3 மடங்கு அதிக சம்பளம், மாஸ் காட்டிய ஜோதிகா.. எந்த படத்துக்கு தெரியுமா?

suriya-jothika

ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும், தற்போது சூர்யா ஆக்ஷன் நாயகனாக மாறி, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான திரைப்படம் தான் கங்குவா. சிவாவின் இயக்கத்தில் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவான இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான படமாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூலே 100 கோடியை தாண்டும் என்று படக்குழு கூறுகிறது. ஏன் என்றால், இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக இருக்கின்றது. இதுவரை இந்தியளவில் நான்காயிரம் டிக்கெட்கள் முன்பதிவாகியுள்ளது என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட, சூர்யா சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை ஆச்சரிய படுத்தியது. எத்தனை படங்கள் நடித்தாலும், மனைவி நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.

சூர்யாவை விட 3 மடங்கு அதிக சம்பளம்

சூர்யா ஜோதிகா தம்பதிகள், ஆரம்ப காலம் முதலே, ஒற்றுமையாகவும், அதே காதலோடும் இருந்து வருகின்றனர். ஜோதிகாவின் முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலேயே ஹீரோவாக நடித்திருந்த சூர்யா, சில ஆண்டுகளிலேயே அவரது ரியல் ஹீரோவாகவும் மாறினார்.

இந்த நிலையில் தனது மனைவியை பற்றி வேறொரு முக்கிய தகவலையும் சூர்யா கூறியுள்ளார். இருவரும் காக்க காக்க படத்தில் ஒன்றாக நடித்த பின்னரே, காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், காக்க படத்தில் சிறிது நேரம் தான் வருவார். எதிரிகளால் கொல்லப்பட்டு விடுவார். அந்த படத்தில், சூர்யாவை விட நடிகை ஜோதிகா 3 மடங்கு அதிக சம்பளத்தை பெற்றார் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement Amazon Prime Banner