செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குடும்பத்தில் குட்டையை குழப்பிய ஜோதிகா.. எங்க அம்மா மட்டும் தக்காளி தொக்கா? கடுப்பில் சூர்யா

Surya – Jyothika; நடிகை ஜோதிகா தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகை. ஆனால் சமீப காலமாக அவர்தான் ஏதோ கோலிவுட் மீது பாராமுகமாக இருக்கிறார். காதல் தி கோர் மலையாள படத்தில் நடித்த பிறகு ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகமாக அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தவில்லை என்பது போல் காட்டிக் கொண்டார். ஜோதிகா எது செய்தாலும் அது அவரை மட்டும் அல்லாமல் அவருடைய மொத்த குடும்பத்தையும் டேமேஜ் செய்யும் என்ற சீரியஸ்னஸ் அவருக்கு புரியவில்லை.

நடிகர் சூர்யாவுடன் ஆன திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அதிகம் தமிழ் மக்களிடம் பாராட்டை பெற்றார். வடமாநிலத்தில் இருந்து இங்கே வந்து இந்த கலாச்சாரத்தை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டு பெண்ணாக மாறியதால் தான் அவருக்கு இவ்வளவு பெயர் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு தேர்ந்தெடுத்து நடித்த படங்களும் அவரை வேற லெவலுக்கு கொண்டு போனது.

சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பைக்கு குடியேறியது, ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிடுவது போன்றவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. ஜோதிகா பட வாய்ப்புக்காக இப்படி மாறிவிட்டாரே என அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் சூர்யாவின் ரசிகர்களும் சேர்ந்து புலம்ப ஆரம்பித்திருந்தார்கள். இது எல்லாம் போதாது என்று இப்போது சூர்யா குடும்பத்திலேயே குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் ஜோதிகா.

Also Read:Shaitaan Movie Review- ஜோதிகாவை ஆட்டிப்படைக்கும் சைக்கோ மாதவன்.. அஜய் தேவ்கனின் சைத்தான் முழு விமர்சனம்

நேற்றைய தினம் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்களும் மகளிர் தினத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள். ஜோதிகாவும் தன்னுடைய பங்கிற்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் தன் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பிடித்த பெண்களின் புகைப்படங்களை வரிசையாக சேர்த்து, வீடியோவாக போட்டு ‘A women in my life’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் முதலில் அவருடைய அம்மா, அடுத்து மகள் தியா, உடன்பிறந்த தங்கை ரோஷினி, அவருடைய அம்மாவின் முதல் கணவருக்கு பிறந்த நக்மா என வரிசைப்படுத்தி புகைப்படங்களை போட்டு இருக்கிறார் ஜோதிகா. இந்த புகைப்படங்களை தொடர்ந்து அவருடைய தோழிகளின் புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவிட்டு விட்டு கடைசியாக கார்த்தியின் மனைவி ரஞ்சனி, சூர்யாவின் தங்கை பிருந்தாவின் புகைப்படம் இருக்கிறது.

சூர்யாவின் அம்மா லட்சுமி சிவக்குமாரின் புகைப்படம் வீடியோவின் இறுதியில் இடம்பெறுவதோடு அந்த வீடியோ முடிகிறது. என்ன இது சூர்யாவின் அம்மா எனக்கு மிகப்பெரிய பக்கபலம், எனக்கு இன்னொரு அம்மா மாதிரி என்றெல்லாம் கதை அளந்து விட்டு இந்த வீடியோவில் ஜோதிகா இப்படி செய்து இருக்கிறார் என பொங்கி வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். இன்னொரு பக்கம், ஊருக்கே சூர்யாவின் அம்மாவாக இருந்தாலும், ஜோதிகாவுக்கு மாமியார் தானே விடுங்கப்பா என நக்கலாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read:டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய ஜோதிகா.. 45 வயதில் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

Trending News