Jyotika: நடிகை ஜோதிகா கடந்த ஒரு வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறார். அதற்கு காரணம் கங்குவா படத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் போட்ட பதிவுதான். சூட்டிங் ஸ்பாட், பியூட்டி பார்லர், கோவில், திருமண விழா என அவர் போகும் இடங்களில் எல்லாம் கேமராக்கள் தான்.
என்னதான் இன்னைக்கு ஜோதிகா மீது கொஞ்சம் மனக்கசப்பு சில ரசிகர்களுக்கு இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தேவதையாக வலம் வந்த நடிகை இவர். அதிலும் இவருடைய இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
நேத்து கர்நாடகா, இன்னைக்கு ஆந்திரா
சில இடங்களில் ஜோதிகா யோசிக்காமல் சில விஷயங்களை பேச அதை தற்போது கொஞ்சம் பூதாகரமாக இருப்பது தான் மனக்கசப்புக்கு காரணம். அதிலும் கங்குவா படத்தின் நெகட்டிவ் ரிவியூ ஜோதிகாவை ரொம்பவே பாதித்திருப்பது நன்றாக தெரிகிறது.
கடந்த வாரம் நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கோவிலுக்கு சென்ற புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. அதை தொடர்ந்து நேற்று சூரியன் மற்றும் ஜோதிகா தம்பதி சகிதமாக கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து இன்று விடியற்காலையில் ஜோதிகா திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். பச்சை நிற புடவையில், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக ஜோதிகா இருப்பதாக பல இணையவாசிகளும் கமெண்ட் செய்து வருகிறார்கள். கர்நாடகாவுக்கு போறீங்க, ஆந்திராவுக்கு போறீங்க எப்போ சென்னைக்கு வருவீங்க கங்கா என 90ஸ் கிட்ஸ் ஜோதிகாவின் புகைப்படத்தை பார்த்து சிலாகித்துப் போகிறார்கள்.
