வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புரட்சிப் பெண் ஜோதிகாவை வலைவீசி தேடும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

ஆரம்பத்தில் ஜோதிகா எல்லா ஹீரோயின்கள் போல கமர்சியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். அதுமட்டுமின்றி டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். மேலும் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்பு நடிப்புக்கு ஜோதிகா முழுக்கு போட்டு விட்டார்.

அதன் பிறகு குழந்தைகள் வளர்ந்த உடன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் புரட்சி பேசும் படியான வசனங்கள் தான் அவரது படத்தில் இடம்பெறுகிறது.

Also Read : ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

இந்நிலையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் தனுஷ்கா என்ற குழந்தைக்கு பாம்பு கடித்திருந்தது. மேலும் அந்த கிராமத்தில் போதிய அளவு சாலை வசதி இல்லாத காரணத்தினால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலதாமதம் ஆகியுள்ளது.

மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இந்த குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைவிட கொடுமை என்னவென்றால் இறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் சாலை படுமோசமாக இருந்ததால் பாதியிலேயே அவர்களை இறக்கி விட்டுள்ளனர்.

Also Read : ஜோதிகாவால் மொத்த காசையும் இழந்த நடிகை.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஹீரோயின்

இதனால் இறந்த குழந்தையை கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் அவரின் பெற்றோர் தூக்கிச் சென்றனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை பேர் அதிர்ச்சி உள்ளாக்கி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலர் இதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் சினிமா துறையைச் சார்ந்த யாரும் இதைப்பற்றி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜோதிகா தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒரு மருத்துவமனை மோசமாக இருந்ததாகவும், கோயிலுக்கும் அளிக்கும் நன்கொடையை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள் என வீர வசனம் பேசி இருந்தார். இப்போது அவர் எங்கே போனார் என நெட்டிசன்கள் வலை வீசி தேடுகிறார்கள்.

Also Read : திருமணத்திற்கு பின் கச்சிதமாக காய் நகர்த்திய ஜோதிகா.. மாதவனுடன் போடும் அதிரடி கூட்டணி

Trending News