திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஓவர் ஆக்டிங் செய்த நடிகை.. மூஞ்சில் ஊற்றிய சாசை அப்படியே நக்கிடு என கூறிய கே பாலச்சந்தர்

Director Balachander: தன் கதையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்தான் இயக்குனர் கே பாலச்சந்தர். இவர் இயக்கிய எண்ணற்ற படங்கள் இவர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அதில் குறிப்பாக ஒரு படத்தில் இவர் மேற்கொண்ட கண்டிஷனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் அப்பட நடிகை.

இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இருக்க, 1989ல் சிறந்த இயக்குனருக்கான விருதை புதுப்புது அர்த்தங்கள் என்னும் படத்தின் மூலம் பெற்றார். இப்படத்தில் ரகுமான், கீதா, சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: கோளாறாக செய்த வேலையால் விவாகரத்து வரை சென்ற அர்ச்சனா.. அன்புக்கு இப்படி ஒரு நோயா?

மேலும் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கருத்தான படங்களில் இப்படமும் ஒன்று. இப்படத்தில் மணிபாரதி எனும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருப்பார். அவர் மனைவி தான் கீதா. மக்கள் விரும்பும் சிறந்த பாடகனாய் விளங்கும் இவர் மீது அதிக அன்பு செலுத்தும் ரசிகைகளின் செயலை விரும்பாது சந்தேக கண்ணோட்டத்தில் சிறப்புற நடித்திருப்பார் கீதா.

அவ்வாறு தான் ஏற்ற கதாபாத்திரத்தை குறித்து இன்டர்வியூ ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார் கீதா. அவ்வாறு தனக்கு கொடுத்த வசனத்தை உச்சரிப்போடு பேசிய பிறகும் இயக்குனரிடம் திட்டு வாங்கியதாகவும் கூறினார். அவ்வாறு படத்தில் ரகுமானுக்கும், எனக்கும் ஏற்படும் வாக்குவாதத்தில் பேசி முடித்த பிறகு ஒரு கட்டத்தில் டேபிளில் இருந்த சாசை தூக்கி எறிந்து விட்டேன். அது ரகுமான் முகத்தில் தெளித்துவிட்டது.

Also Read: கவர்ச்சி குறைந்ததால் சரிந்த மார்க்கெட்.. முன்னும் பின்னும் டிங்கரிங் செய்த 41 வயது முத்தின நடிகை

உடனே அந்த நொடியில் இயக்குனர், ரகுமானுக்கு முத்தம் கொடுத்து விட்டு மீண்டும் முகத்தில் இருக்கும் சாசை நக்கி விடுமாறு கண்டிஷன் போட்டாராம். இக்காட்சியில் என்னுடைய கோபம் தத்துரூபமாக தெரியும் எனவும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த கதாபாத்திரமாகவே தான் மாறிவிட்டதாகவும் கூறினார்.

அவ்வாறு வசனம் ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் இரண்டையும் ஒரே டேக்கில் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் கூறினார். இவ்வாறு நடித்தும் இயக்குனர் பாலச்சந்தர் இது கூட உன்னால் ஒழுங்கா பண்ண முடியாதா எனவும் கூறினாராம். ஒவ்வொரு நுணுக்கங்களையும் உன்னிப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இத்தகைய கண்டிஷன்களை மேற்கொண்டார் எனவும் தெரிவித்தார்.

Also Read: ஹீரோயின் மீது கிரஸ்சாகி தூக்கத்தை தொலைத்த ராஜ்கிரண்.. அம்மாவிடமே சிபாரிசுக்கு சென்ற மாயாண்டி

Trending News