வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

நடிகைகளுக்கு ரூம் போட்டு காசை அழித்த ஏ ஆர் முருகதாஸ்.. மேடையில் கடுப்பாகி பேசிய தயாரிப்பாளர்

சென்னையில் அடங்காமை எனும் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பலரது முன்னிலையில் பிரபல இயக்குனர் குறித்து இவ்வாறு பேசியுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, “தமிழகத்தில் முதலில் தமிழர்களுக்கு தான் வேலை கொடுக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் போது மற்ற மொழிக்காரர்களுக்கு வேலை கொடுக்கலாம். ஆனால் தமிழகத்தில் இன்று பிற மொழி பேசுபவர்களுக்கு தான் எந்த வேலையாக இருந்தாலும் கொடுக்கப்படுகிறது. தமிழர்களுக்கு வேலையில்லை.

தர்பார் படம் எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது எனக்கு மிகுந்த வருத்தம். ஒரு தமிழனான முருகதாஸ் இதை செய்திருக்கக் கூடாது. அப்படத்தை மும்பையில் எடுத்ததால் அங்குள்ள கலைஞர்கள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே படத்தை தமிழகத்தில் எடுத்திருந்தால் எத்தனையோ பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு வேலை கிடைத்திருக்கும். இந்த படத்திற்கு மும்பையில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூம் போட்டதாகவும் இந்த படப்பிடிப்பை தமிழகத்தில் செய்திருக்க முடியாதா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் கே.ராஜன் .

ar-murugadoss
ar-murugadoss

முதலில் தமிழன் என்ற உணர்வு இருக்க வேண்டும். அதேபோல் தமிழில் இல்லாத தலைப்பா? அதை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் தலைப்பை தேடுகிறார்கள். நீ தமிழன் இல்லையா. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் மட்டும் படம் 500 நாள் ஓடி விடுமா. தமிழில் பெயர் வைத்தால் மானியம் தருவேன் என அற்புதமான உத்தரவை கொண்டு வந்தார் டாக்டர் கலைஞர்.

இந்த நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் மானியம் வழங்குவதாக கலைஞர் கூறினார். அதை நீங்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும். இங்கிலீஷில் பெயர் வைத்தால் அதை வெளியே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள்” என கூறியுள்ளார்.

அவர் கூறுவதும் நியாயம்தானே. தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால் வேறு எங்கு தான் நமக்கான முன்னுரிமை கிடைக்கும். அரசு பணியிலிருந்து இதுபோன்ற சினிமா பணிகள் வரை அனைத்திலும் வடமாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுதான் என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -spot_img

Trending News