பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் கெளதம்.
வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் தான் காஜல் அகர்வால். வெள்ளைத் தோலும் கொழு கொழு தேகமும் இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தவர்.
ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் எல்லாத்துக்குமே ரெடி என கலக்கிய காஜல் அகர்வாலை கிட்டத்தட்ட பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது தெலுங்கு சினிமா. தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதெல்லாம் அந்த காலம் போல. தற்போது திருமணம் ஆன நடிகைகளுக்கு தான் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமந்தாவை தொடர்ந்து காஜல் அகர்வாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.
பட வாய்ப்புகள் வந்தாலும் திருமணத்திற்குப் பின் வெள்ளித்திரையில் நடிக்கப்போவதில்லை என்று காஜல் அதர்வாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் மும்பையில் கனவினின் பிசினஸில் முழு கவனம் செலுத்தப் போவதாகவும்.
இதற்கு பின் வரும் பட வாய்ப்புகளை வேண்டாம் என்று உதறி வருகிறாராம் காஜல்அகர்வால். எது உண்மை என்பதை அவர் அறிக்கை மூலம் வெளியிட்டால் தான் தெரிய வரும்.