ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தன்னைத் தானே வாத்தியாருடன் கலாய்த்து மீம்ஸ் போட்ட ஆர்யா.. பாக்ஸிங் விட இது தான் ரத்த பூமி

சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படம் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். இப்படத்தில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவும், ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் பசுபதியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரது கதாபாத்திரமும் மிகவும் பிரபலமாகும்.

இவர்களின் கதாபாத்திரத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்கள் உருவானது. இப்படத்தில் பசுபதியை சைக்கிளில் வைத்து ஆர்யா ஓட்டி செல்வது போன்ற காட்சி ஒன்று இருக்கும். இதனை மையமாக வைத்து நெட்டிசன்கள் பலர் கேலி செய்து பலவிதமான மீம்களை வெளியிட்டனர். அவை ட்விட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பசுபதி ட்விட்டரில் தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் தொடங்கி உள்ளார். ஏற்கனவே அவரது பெயரில் போலி கணக்கு உள்ள நிலையில், பசுபதியின் உண்மையான ட்விட்டர் கணக்கை நடிகர் ஆர்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஆர்யா பதிவிட்டுள்ளதாவது, ”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்க விட ரத்த பூமி, உன்னோட பேருல இங்க நிறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான் தாண்டானு உள்ள வந்த பார்த்தியா , உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த பசுபதி, ”ஆமாம் கபிலா பாக்ஸிங் தான் உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ள பின்னாடி உட்கார்ந்துக்கிறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ”என்று பதிலளித்துள்ளார்.

arya-twit-1
arya-twit-1

தற்போது இவர்களது இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களை கலாய்த்து மீம் பதிவிட்டதை மிகவும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு அவர்களைப் போலவே தங்களைத் தாங்களே கலாய்த்துக் கொண்டு ட்விட்டரில் பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending News