தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது காதல் கோட்டை. அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த படத்தை அகத்தியன் என்பவர் இயக்கியிருந்தார். காதல் கோட்டை படம் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
வியாபார ரீதியாக அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த காதல் கோட்டை படத்தை பற்றி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு வசனம் வைக்கப்பட்டது. பெரும்பாலும் இது காதல் கோட்டை படத்தை கிண்டலடித்ததாகவே பார்க்கப்பட்டது.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு குட்டி கதை சொல்லும் பழக்கம் உள்ளது போன்ற கதாபாத்திரம் அமைந்தது. அதில் தல அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் காதல் காட்சியை தன்னுடைய காதல் தோல்வியாக விஜய் சொல்வது போல படமாக்கப்பட்டது.
காதல் கோட்டை படத்தில் அஜித்துக்கு பரிசாக தேவயானி ஸ்வெட்டர் ஒன்றை அனுப்பி வைப்பார். அதை விஜய் கூறும்போது படத்தின் நாயகியான மாளவிகா மோகனன், ராஜஸ்தானில் அடிக்கிற வெயிலுக்கு எதுக்கு ஸ்வெட்டர் என கேட்பது போல அந்த காட்சி அமைந்தது.
அதன் பிறகு அந்த காட்சியை பற்றி சமூக வலைதளங்களில் பல வகையாக கருத்துக்கள் வெளிவந்தன. இந்நிலையில் காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் சமீபத்திய பேட்டியில் அதற்கான விடையை அவரே கொடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் பகலில் எவ்வளவு வெயில் இருக்கிறதோ, அந்தளவுக்கு இரவில் கடுமையான பனி இருக்கும் என்பது அங்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியும் எனவும், அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையும் உளறக் கூடாது எனவும் அந்த காட்சியை கிண்டலடித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.