டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் தான் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, இலக்கியா, சேலம் மணி உள்ளிட்டவர்கள். தற்போது இந்தியாவில் டிக் டாக் செயலியை தடை செய்துள்ளதால் இவர்கள் அனைவரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இவர்களது வீடியோக்கள் முழுவதும் ஆபாசமாக இருப்பதாகவும், இவர்களது ஆபாசம் நிறைந்த பேச்சுக்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் எப்போதும் இணையதளங்களில் மூழ்கி இருப்பதால், அவர்களின் பார்வைக்கு இந்த ஆபாச வீடியோக்கள் வந்துவிடுகின்றன.
இதனால் மாணவர்களின் கல்வி சீரழிகிறது என்று பலரும் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, இலக்கிய உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையே காதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ந
டிகர் ‘காதல்’ சுகுமார் ஊடகங்களில் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் ஊடகங்களில் காதல் சுகுமார் கூறியது தொடர்பாக நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி.பி.முத்து ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக காதல் சுகுமாருக்கு தொடர்ந்து கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்கள்.
இதையடுத்து நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் சுகுமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜி.பி. முத்து, சேலம் மணி, நெல்லை சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆபாசங்கள் நிறைந்து இவர்களின் சமூக வலைதள பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.