வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வசூல் மழையில் காதல் தி கோர்.. 3வது நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Kadhal The Core 3rd Day Collection: ஜோதிகா தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கினாலும் வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த சூழலில் தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இதில் மம்முட்டி மேத்யூ தேவஸி என்ற கதாபாத்திரத்திலும், ஜோதிகா ஓமணா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இவர்களது மகளாக அனகா மாயா ரவி ஃபெமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் மேத்யூ மீது ஓமணா விவாரத்து கேட்டு வழக்கு தொடர்கிறார். இதற்கான காரணம் தான் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

அதாவது மேத்யூ ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்று ஓமணா விவாகரத்துக் கேட்டிருக்கிறார். ஆனால் மேத்யூவுக்கு ஓமணாவை பிரிய மனமில்லை. இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது தான் காதல் தி கோர் படத்தின் கிளைமாக்ஸ். மம்முட்டி இதுபோன்று ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read : வாயைக் கொடுத்து வீண்வம்பை விலைக்கு வாங்கிய 5 நட்சத்திரங்கள்.. சர்ச்சையாக வெடித்த ஜோதிகாவின் கரிசனம்

சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள். சமந்தா கூட படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் முதல் நாளில் இப்படம் 90 லட்சம் கலெக்ஷன் செய்திருந்தது. அதன்பிறகு படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் 1.25 கோடி வசூல் செய்திருந்தது.

மேலும் மூன்றாவது நாள் முடிவில் 1.45 கோடி வசூல் மழையில் காதல் தி கோர் படம் நனைந்தது. ஆகையால் இதுவரை கிட்டத்தட்ட 3.60 கோடி வசூலை இப்படம் பெற்றிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : விஜய்யின் காலை வாரிவிட்ட ஜோதிகா.. 3 ஹீரோக்களுக்கு மட்டும் கொடுத்த கௌரவம்

Trending News