Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலுவிடம் யாருக்கும் தெரியாமல் அரசி பேச ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் குமரவேலுடன் பைக்கில் ஊர் சுற்றும் அளவிற்கு அரசி துணிந்து விட்டார். அத்துடன் வீட்டு வாசலில் நின்று கொண்டு குமரவேலுவை பார்த்து பேசுகிறார். அப்படி பேசும்போது சுகன்யா பார்த்து விடுகிறார்.
உடனே குமரவேலுவிடம் இப்படி பேசுவதை யாராவது பார்த்துவிட்டால் தேவையில்லாத பிரச்சினை வரும், கொஞ்சம் உஷாராக நடந்து கொள் என்று சொல்கிறார். பேசணும்னா தனியா எங்கேயாவது கூட்டிட்டு போய் பேசு என்று சொல்கிறார். அதற்கு குமரவேலு, அவள் தான் எங்கேயும் வரமாட்டேன்னு சொல்கிறாள். சினிமாவிற்கும் கூப்பிட்டேன் அதற்கும் பயமாயிருக்கு என்று சொல்கிறாள்.
அதற்கு சுகன்யா, நான் பேசி உன் கூட வர வைக்கிறேன் நீ இப்பொழுது உள்ளே போ என்று சொல்கிறார். பிறகு அரசிடம் குமரவேலுவை உனக்கு பிடிச்சிருக்கா, அவனை கல்யாணம் பண்ணிக் கொண்டால் 30 வருஷம் பகை தீர்ந்து போய்விடும். இந்த இரண்டு குடும்பமும் ஒற்றுமையாகி விட்டால் உங்க அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே உனக்கு மாமனார் வீடும் அமைந்துவிடும்.
பிறகு எல்லோரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி பேசுகிறார். இதை எல்லாம் கேட்ட அரசி, குமரவேலுவை கல்யாணம் பண்ணுவதற்கு முழு சம்மதம் என்று சுகன்யாவிடம் ஓகே சொல்லிவிடுகிறார். அப்படி என்றால் குமரவேலுடன் சினிமாவிற்கு போயிட்டு வா, உனக்கு பயமாக இருந்தால் நானும் கூட வருகிறேன் என்று சொல்லி அரசியை கூட்டிட்டு போக தயாராகி விட்டார்.
ஆனால் மீனாக்கு மட்டும் ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. பிறகு கோமதிக்கும் சந்தேகம் வந்த நிலையில் அரசிடம் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். அத்துடன் அரசி போனை வாங்கி செக் பண்ணுகிறார். அடுத்ததாக ராஜியை கூட்டிட்டு கதிர் கிரவுண்டுக்கு போய் விடுகிறார். ஆனால் நைட்டு ராஜி சரியாக தூங்காததால் சோர்வாக இருப்பது போல் கதிருக்கு தெரிகிறது.
ஏன் நீ சரியாக தூங்கவில்லை என்று ராஜியிடம் கேட்கிறார். அதற்கு ராஜி நீ இரவு தூங்க வரவில்லை, வந்து விடுவாய் என்று காத்துக் கொண்டிருந்தேன் என சொல்கிறார். அப்பொழுது மாமா மாடியிலேயே தூங்கலாம் என்று ஆசைப்பட்டாங்க அதற்காகத்தான் எல்லோரும் மாடியிலேயே தூங்கி விட்டோம் என்று சொல்கிறார். உடனே ராஜிக்கு கோபம் வந்துவிட்டது, கல்யாணம் ஆகிவிட்டால் எல்லோரும் ரூமில் தான தூங்கணும்.
சித்தப்பா ஏன் இப்படி பண்றாரு என்று கதிர் மீது பொறாமை பட ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து பழனிவேலுமிடம் உங்களுக்கு அத்தைக்கும் ஏதாவது பிரச்சனையா என்று செந்தில் மற்றும் கதிர் கேட்கிறார்கள். அதற்கு பழனிவேலு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சமாளித்து விடுகிறார். பிறகு செந்தில், மீனாவின் அப்பா அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய் இருந்தால் போதும் வேலை கிடைத்து விடும் என்று சொன்னதாக செந்தில் கதிரிடம் சொல்கிறார்.
அப்பொழுது கதிர் நல்ல ஐடியாவாக இருக்கிறது உனக்கு ஆசையாக இருக்கிறதா என்று கேட்கிறார். செந்தில் ஆமாம் என்று சொல்லியதும் அங்கு வந்த பாண்டியனிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கதிர் பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்.