புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எவ்வளவு பட்டாலும் திருந்தாத கதிர்.. ஒருவழியாக முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போது எதிர்பாராத உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அரங்கேற இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதால் சுக்கு நூறாக பிரிந்த குடும்பம் ஒன்றாக இணைய இருக்கிறது. சொந்த மருமகனாலேயே கத்தி குத்துபட்டிருந்தார் ஜனார்த்தனன்.

இப்போது நலம் பெற்றுள்ள அவர் வீட்டு திரும்ப இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அவரது மருத்துவச் செலவுக்கான பில் வருகிறது. அதுவே கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஆகுவதால் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வரலாம் என்று மீனா கூறுகிறார். ஆனால் பிரசாந்த் எல்லா பணத்தையும் திருடி செலவழித்து விட்டார்.

இதனால் மீனாவின் அம்மா தன்னுடைய நகையை அடகு வைத்து பணத்தை கட்டலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதற்குள்ளாகவே ஜீவா வந்து தான் மருத்துவ செலவை பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். அப்போது பார்த்தால் கதிர் ஹோட்டலுக்காக வைத்திருந்த பணத்தை தான் ஜனார்த்தனன் மருத்துவ செலவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆரம்பத்தில் கதிர் மீதுதான் ஜனார்த்தனன் கத்திக்குத்து பழி போடப்பட்டது. மீனாவும் முல்லையை கண்டபடி பேசி இருந்தார். இப்போது எவ்வளவு பட்டாலும் திருந்தாத கதிர் மீண்டும் மீனாவின் குடும்பத்திற்கு உதவி செய்து இருக்கிறார். ஆனாலும் சரியான நேரத்தில் உதவுவார்கள் யார் என்பதை ஜனார்த்தனன் இதன் மூலம் புரிந்து கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் ஜீவா மற்றும் கதிர் இருவரும் ஜனார்த்தனனை அவர்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது மூர்த்தியிடம் உங்களது தம்பிகளை அருமையாக வளர்த்து இருக்கிறீர்கள் என்று பெருமையாக பேசுகிறார். இதனால் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் உச்சி குளிர்ந்த போகிறார்கள்.

இவ்வாறு இது ஜனார்த்தனன் இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வில்லனாக இருந்த நிலையில் இப்போது அவரும் திருந்தி விட்டார். ஆகையால் ஒரு வழியாக இயக்குனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு எண்டு கார்டு போட இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 விரைவில் வர இருக்கிறது.

Trending News