புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராஜியை விட்டுக் கொடுக்காமல் பொக்கிஷமாக பாதுகாத்த கதிர்.. டியூஷன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இந்த மாதிரி ஒரு அவமானம் நடக்க கூடாது என்பதற்காக தான் பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு நோ சொல்லியிருந்தார். ஆனால் அதையும் மீறி ராஜி, கதிர் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் தன்னால் முடிந்த ஏதாவது ஒரு உதவி பண்ண வேண்டும் என்பதற்காக ஹோம் டியூஷன் எடுக்க முடிவு செய்தார்.

ஆனால் அந்த விஷயம் தற்போது ராஜியின் சித்தப்பா மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஏற்கனவே முத்துவேல், தன் பொண்டாட்டி நகை அனைத்தையும் ராஜி தான் வைத்திருக்கிறார் என்ற கோபத்தில் இருக்கிறார். இதனால் இந்த ரெண்டு விஷயத்தையும் வைத்து பாண்டியனை அவமானப் படுத்தலாம் என்று வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு போக தயாராகி விட்டார்கள்.

மனைவியை விட்டுக் கொடுக்காமல் ராஜிக்காக சப்போர்ட் பண்ணும் கதிர்

ஆனால் இது எதுவுமே தெரியாத பாண்டியன் வழக்கம் போல் வாயை கொடுத்து நல்ல வாங்கி கட்டிக் கொண்டார். சக்திவேலும் சும்மா இல்லாமல், வீடு வீடா போய் டியூஷன் எடுத்து படிப்பதற்காக தான் வீட்டை விட்டு ஓடி போனியா? என்று ராஜிடம் கோபமாக கேட்கிறார். வீட்டுக்கு வந்த மருமகளை சம்பாதிக்க அனுப்பி விட்டு நீ சொகுசாக இருந்து சாப்பிட்டியா என்று வாய்க்கு வந்தபடி பாண்டியனை திட்டுகிறார்.

அதன் பிறகு தான் பாண்டியனுக்கே தெரிகிறது ராஜி போன் டியூஷன் எடுத்துட்டு வருகிறார் என்பது. உடனே அங்கே இருக்கும் பொழுதே ராஜியை, ஏன் என்னிடம் சொல்லாமல் மறைத்தாய் என்று பாண்டியன் கேட்க. அதற்கு என்னமா டிராமா போடுகிறாய் உனக்கு தெரியாமல் எப்படி இந்த விஷயம் தான் நடந்திருக்கும். நீ தான் மருமகளை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க பார்க்கிறாய் என்று பாண்டியனிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

இதை எல்லாம் பார்த்து அழுது கொண்டிருந்த ராஜியை சமாதானப்படுத்தும் விதமாக மற்றவர்கள் யாரும் திட்டக்கூடாது என்பதற்காகவும் கதிர், ராஜி முதல்ல நீ வீட்டுக்குள்ள போ நான் பார்த்துக்கிறேன் என்று பொக்கிஷமாக பாதுகாத்து விட்டார். பிறகு நகை விஷயமும் தெரிந்த பிறகு பாண்டியன் அனைவரையும் திட்டி விட்டு கோமதியிடம் நகை திருப்பி கொடு என்று சொல்கிறார்.

அதற்கு கோமதி நகை அனைத்தும் லாக்கரில் இருக்கிறது என்று சொல்லிய நிலையில் பாண்டியன் நாளைக்கு அந்த நகையை எடுத்துட்டு வந்து அவங்க முகத்தில் தூக்கி எறிந்து விடு என்று சொல்லுகிறார். இதனை தொடர்ந்து வீட்டுக்குள் பஞ்சாயத்து நடக்கும் பொழுது பாண்டியன், ராஜியை பார்த்து டியூஷன் எடுப்பதற்கு தான் பொய் சொல்லிக்கிட்டு கோச்சிங் கிளாஸ் போறேன் படிக்கப் போறேன் என்று என்னை ஏமாற்றினாய் என கேட்கிறார்.

உடனே கதிர், அவள் யாரை ஏமாற்றினால் அவள் தேவைக்காக அவள் சம்பாதிக்க நினைத்தது தப்பா என்று கேட்கிறார். அவள் செலவுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் கையேந்தாமல் சுயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது தப்பு இல்லை. அதனால் அவளிடம் இந்த கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் என்று பாண்டியனிடம் கதிர் கோபமாக சொல்லிவிட்டார்.

அத்துடன் பாண்டியன், ராஜியை பார்த்து அப்படி உனக்கு என்ன பிரச்சனை ஏன் டியூஷன் எடுக்க வேண்டும் என்று இவ்வளவு பிடிவாதமாக சொல்கிறாய் என்று கேட்ட நிலையில் கதிர் படும் கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கூட நேரமில்லாமல் காலேஜ் படிப்பு, ஃபுட் டெலிவரி, டிரைவர் என வேலை பார்த்துட்டு வருபவருக்கு என்னால் முடிந்த உதவி பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதற்காக தான் எனக்கு தெரிந்தது மூலம் டியூஷன் எடுக்க நினைத்தேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட பாண்டியன், கடைசியாக ராஜி சொன்னது சரி என்று சம்மதத்தை கொடுத்து டியூஷன் எடுப்பதற்கு ஓகே சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News