செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

லியோ படத்தில் இணைந்த கைதி பட நடிகர்.. லோகேஷ் மறைத்து வைத்த முக்கிய LCU கன்பார்ம் தான்

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகுவதால் தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை குறித்த புதுப்புது அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கின்றது.

அதிலும் இப்போது கிடைத்திருக்கும் தகவலின் படி லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சின் (எல்சியு) கீழ் வருமா என்கின்ற கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு மொத்தமும் காஷ்மீரில் சுமார் 60 நாட்களுக்கு மேல் சென்று முக்கிய காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பி உள்ளனர்.

Also Read: பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

இதனை அடுத்து தற்போது லியோ படம் பையனூரில் சூட்டிங் நடைபெற்று வந்தது. இப்பொழுது அந்த செட்யூலும் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த படம் எல்சியு எனப்படும் லோகேஷ் யுனிவர்ஸ்சில் வருமா என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ட்விஸ்ட் வைக்கிறார் லோகேஷ்.

கைதி படத்தில் நம்மளை பெரிதும் கவர்ந்த கதாபாத்திரம் நெப்போலியன். அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தி இருப்பார் ஜார்ஜ் மரியன். இப்பொழுது லியோ படத்தில் அந்த நெப்போலியன் கதாபாத்திரம் உள்ளே வருகிறது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வில்லன்களாக நடிக்கின்றனர்.

Also Read: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

இன்னிலையில் இந்த படத்திற்கான பிரம்மாண்ட பாடல் ஒன்று உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் விஜய்யோடு இணைந்து ஆட போகின்றனர். இந்த பாடலை தினேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இப்போது லியோ படத்தில் ஜார்ஜ் மரியன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தளபதி ரசிகர்கள் அறிந்ததும் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் நெப்போலியன் என்ற கான்ஸ்டபிள் ஆக நடித்துள்ளார். அதே கெட்டப்பில் லியோ படத்திலும் இணைந்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

Trending News