வடக்கிலிருந்து வந்து தற்போது தென்னிந்தியாவில் மையம் கொண்டிருக்கும் கவர்ச்சி புயல் தான் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் குவியும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
ரசிகர்களை அப்படி என்ன வசியம் செய்து வைத்தாரோ தெரியவில்லை. நாளுக்கு நாள் வயது ஆக ஆக படவாய்ப்புகளும் மலைபோல் குவிந்து வருகின்றன. அந்தவகையில் அடுத்ததாக எடுத்து சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இளம் நடிகர்களின் படவாய்ப்புகளும் காஜல் அகர்வாலுக்கு தான். இப்படி ரசிகர்களின் பேவரைட் ஆக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு சிறுவயதிலிருந்தே உடம்பில் ஒரு பிரச்சனை இருக்கிறதாம்.
அதுதான் ஆஸ்துமா. சிறுவயதில் பயணம் செய்யும் போது தூசி மற்றும் புகை ஆகியவற்றின் காரணமாக தனக்கு அடிக்கடி ஆஸ்துமா பிரச்சனை ஏற்படும் எனவும், அதற்காக இன்ஹேலர் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலர் பொதுவெளியில் இன்ஹேலர் பயன்படுத்துவதற்கு சங்கடபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார், அப்படி சங்கடப்பட தேவையில்லை எனவும், நம் உடலின் ஆரோக்கியம் தான் முக்கியம் என ஆஸ்துமா நோயாளிகளுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
காஜல் அகர்வால் சமீபத்தில் தான் தன்னுடைய நீண்ட கால நண்பர் கௌதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.