தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் அப்பா வயது நடிகருக்கெல்லாம் ஜோடியாகி வரும் சோகம் தான் நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கிலிருந்து வந்து தென்னிந்தியாவை ஆண்ட நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் கிளாமர் ஒன்றை மட்டுமே கையில் எடுத்து மிரட்டி விட்டார். அதுவும் தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த படங்களில் எல்லாம் கிளாமரில் கதிகலங்க விட்டிருப்பார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கிளாமர் காட்டி கவர்ந்தவர் பின்னர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவுடன் கவர்ச்சியை குறைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் தற்போது வயது முதிர்வின் காரணமாக சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக வெப்சீரிஸ், வயதான நடிகர்களுக்கு ஜோடி என அவரின் பாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வந்ததை விடக்கூடாது என்பதற்காக சம்பளத்தை இரட்டிப்பாக்கி பேசி வயதான நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் நாகர்ஜுனா என்பவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவருக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பார்ப்பதற்கு இன்னும் இளமையாக இருப்பதால் ஜோடி போட்டால் பெரிய வித்தியாசம் இருக்காது என ஓகே சொல்லிவிட்டாராம் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவி என்பவருக்கு ஜோடியாக ஆச்சாரியா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் வயதான நடிகர்களுக்கு ஜோடியாகும் நடிகைகளில் முன்வரிசையில் உள்ளாராம் காஜல் அகர்வால். அதுமட்டுமில்லாமல் காஜல் அகர்வால் எவ்வளவு வயதானாலும் பிரச்சனையில்லையாம், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் போதும் என தாராளம் காட்டுகிறாராம்.