ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கர்ப்பமான காஜல் அகர்வால்? புகைப்படத்துடன் சூசகமாக சொன்ன கணவர்

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களாகவே தனக்கு வரும் பட வாய்ப்புகளை தள்ளிப் போட்டதால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று ஒரு வதந்தி வெளியாகி வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என காஜல்அகர்வால் தொடர்ந்து மறுத்து வந்தார்.

காஜல் அகர்வால் தமிழில் துப்பாக்கி ஜில்லா மெர்சல் என மூன்று படங்களில் தளபதி விஜயுடன் ஜோடி போட்டு நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் பெரிய அளவு படவாய்ப்புகள் கைவசம் இல்லை என்றாலும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது என்னமோ உண்மைதான்.

kajal-husband-cinemapettai
kajal-husband-cinemapettai

ஆனால் கடந்த சில மாதங்களாக தன்னை தேடி எந்த பட வாய்ப்புகள் வந்தாலும் இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால் காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் கணவருடன் வெளியில் வந்த காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரல் ஆனது. மேலும் அதை நிரூபிக்கும் வகையில் அவரது கணவர் கௌதம் கிச்சு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதனால் இன்னும் குறைந்தது ஒரு வருடத்திற்கு காஜல் அகர்வால் எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. முன்னணி நடிகைகள் பலரும் உச்சத்தில் இருக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து வரும் நிலையில் காஜல்அகர்வால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது அனைவருக்குமே ஆச்சரியம்தான். வாழ்த்துக்கள் மேடம்!

Trending News