சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு பொண்டாட்டியா? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் கெளதம்.

வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் தான் காஜல் அகர்வால். வெள்ளைத் தோலும் கொழு கொழு தேகமும் இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தவர்.

ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அந்த வகையில் எல்லாத்துக்குமே ரெடி என கலக்கிய காஜல் அகர்வாலை கிட்டத்தட்ட பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது தெலுங்கு சினிமா. தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதெல்லாம் அந்த காலம் போல. தற்போது திருமணம் ஆன நடிகைகளுக்கு தான் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமந்தாவை தொடர்ந்து காஜல் அகர்வாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய காதல் கணவருடன் காதலிக்கும் காலங்களில் சிங்கப்பூரில் உள்ள மியூசியத்திற்கு சென்றுள்ளார் காஜல் அகர்வால். அங்கு காஜலுக்கு ஒரு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை தற்போதுதான் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பொண்டாட்டியா என காஜல் அகர்வாலின் கணவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

kajal-agarwal-Statue-cinemapettai
kajal-agarwal-Statue-cinemapettai

Trending News