சினிமா நடிகைகள் பலரும் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது அதிகமாகிக்கொண்டே வருகின்றன. இளம் நடிகைகளே இப்படி யோசிக்கும்போது மூத்த நடிகைகள் செய்ய மாட்டார்களா என்ன.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் காஜல் அகர்வால். கமர்சியல் ஹீரோக்களின் ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் தன் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கணவர் சினிமாவுக்கு சப்போர்ட் செய்வதால் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்கள்தான் அவருக்கு கிடைத்து வருகின்றன.
சமீபத்தில்கூட காஜல் அகர்வால், சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று என்னுடைய கணவர் ஒரு வார்த்தை சொன்னால் அப்படியே சினிமாவை விட்டு சென்று விடுவேன் என்று கூறியதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
காஜல் அகர்வால் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து முன்னர் இருந்த காஜல் அகர்வாலின் முகத்தோற்றம் தற்போது சற்று மாறியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் முதன்முதலாக சுத்தமாக மேக்கப் இல்லாமல் தன்னுடைய ஒரிஜினல் முகம் இதுதான் என அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் கிண்டலடிக்கும் விதமாக அமைந்துவிட்டது. பார்ப்பதற்கு ஆன்ட்டி போன்று இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்.