இந்திய சினிமாவிலேயே பிரபல நடிகையாக வலம் வந்த காஜல்அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் தேனிலவு சென்ற புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றினார்.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் விதி. ஆனால் காஜல் அகர்வால் விஷயத்தில் அப்படி இல்லையாம். திருமணம் ஆன பிறகும் காஜல் அகர்வாலுடன் ஜோடி போட பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
அதுமட்டுமில்லாமல் ஹாட்ஸ்டார் தளத்திற்காக வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது கணவருடன் விடிய விடிய மது அருந்துவிட்டு கட்டியணைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
நடிகைகள் மது அருந்துவது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு கணவருடன் சேர்ந்து விடிய விடிய விடிய குடித்துவிட்டு கும்மாளம் அடித்துள்ள காஜல் அகர்வால்மீது கண்டனம் எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை இப்போது வெளியீட்டு வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால்.
என்ன செய்தாலும் சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு விடுவீர்களா என நடிகைகளை சமீபகாலமாக ரசிகர்கள் நேரடியாகவே கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் காஜல் அகர்வால் வெளியிட்ட இந்த புகைப்படமும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.