தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே அதனை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தமிழ் ரசிகர்களிடம் நல்ல பாராட்டைப் பெற்றது.
ஆனால் சமீபகாலமாக காஜல் அகர்வால் பல படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு படம் வெளியாகாமல் பல மாதங்களாக பெட்டிக்குள்ளே இருந்து வருகிறது.
பாரிஸ் பாரிஸ் படம் இவரது நடிப்பில் முழுமையாக முடிந்தது. ஆனால் தணிக்கை குழு சார்பில் ஒரு சில பிரச்சனைகளால் இன்னும் படம் வெளியாகவில்லை, ஹேய் சினாமிகா திரைப்படம் இவரது கல்யாணம் இருந்ததால் நடிக்காமல் இருந்தார். திருமணம் முடிந்த பிறகு மீதி காட்சிகள் அனைத்தும் நடித்து முடித்துவிட்டார். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை.
அடுத்ததாக கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இன்னும் படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது.
தற்போது பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் எந்த ஒரு படமும் வெளியாக இருப்பதால் அவர் சோகத்தில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.