வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சினிமாவை விட்டு விலகும் காஜல்.. அவரே வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில் திடீரென சில மாதங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு தனது கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் ஒரு சில படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலிடம் குடும்ப வாழ்க்கை என்றான பிறகு மீண்டும் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த காஜல்அகர்வால், “தற்போது தனது கணவர் நடிப்பதற்கு முழு ஆதரவையும் அளித்து வருகிறார். அதனால் நான் எந்த கவலையும் இல்லாமல் நடித்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

kajal-agarwal
kajal-agarwal

மேலும், “ஒருவேளை எதிர்காலத்தில் எனது கணவர் நடிப்பை நிறுத்தி விடு என்று சொன்னால் உடனே நடிப்பை நிறுத்தி விடுவேன்” என அதிர்ச்சியான பதிலையும் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News