தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதன் பிறகு கோமாளி திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு வாங்கி கொடுத்தது.
அதன்பிறகு இவர் மற்ற மொழிகளில் கவனம் செலுத்த பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு படங்களில் நடிக்காமல் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது ஏய் சினாமிகா, இந்தியன் 2 ,கோஷ்டி மற்றும் பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலமாக நடிகைகள் பலரும் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தற்போது காஜல் அகர்வால் சமூகவலைத்தள பக்கத்தில் சிறிய வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம காஜல் அகர்வால் சிறுவயதில் இப்படி அழகாக உள்ளார் என கூறிவருகின்றனர்.
மேலும் காஜல் அகர்வால் இனிமேல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த உள்ளார் எனவும் விரைவில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருவார் எனவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.