வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

திருமணத்திற்கு பின் 60 வயது நடிகருடன் ஜோடி போடும் காஜல்.! என்னாடா இது, தளபதி ஹீரோயினுக்கு வந்த சோதனை

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், மேலும் தெலுங்கில் பல படங்களிலும், ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் மொசகள்ளு என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கவர்ச்சிக்கும் ஓகே சொல்லி கல்லா காட்டுகிறார் அம்மணி.

தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படம் தலயுடன் ஒருபடம் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். திருமணத்திற்குப் பின்னும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.

kajal-agerwal-cinemapettai
kajal-agerwal-cinemapettai

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News