கல்யாணத்துக்கு பிறகு சரக்கு கடையில் காஜல்.. இங்கதான் இப்படி போஸ் கொடுக்கனுமா?

எப்போதுமே ஹிந்தி நடிகைகளுக்கு வாழ்க்கை தருவது என்னமோ தென்னிந்திய சினிமாதான். அப்படி ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் காஜல் அகர்வால்.

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் கோமாளி. அதன்பின் தமிழில் இவருக்கு ஒரு படமும் வெளியாகவில்லை. தமிழில் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி படத்திற்கு பிறகு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

மேலும் தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக வைத்துக் கொண்டார். அதேநேரம் பிஸியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் அதிக படங்கள் வருகிறது.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸ் இவர்தான். இப்படி கல்யாணத்திற்கு பிறகு சினிமா மார்க்கெட் அதிகம் உள்ள நடிகைகளில் குறிப்பிடவேண்டிய ஒருவராக மாறி உள்ளார்.

திருமணத்திற்குப் பின்னும் கவர்ச்சி குறையாமல் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு மோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

kajal-aggarwal-1
kajal-aggarwal-1