தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சுமாரான படங்கள் நடித்தாலும் அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் காஜல் அகர்வால். தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.
அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வெளியான துப்பாக்கி திரைப்படம் தமிழில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தளபதி விஜய்யுடன் மட்டுமே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் உருவாகியிருந்த அந்த வெப்சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் இழுத்து போர்த்திக்கொண்டு நடிப்பார் என்று பார்த்தால் சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப்சீரிஸில் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, கவர்ச்சி உடை என கலந்துகட்டி மிரட்டி இருந்தார்.
தற்போது அதனை தொடர்ந்து மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். தற்போது வரை இந்த ஒரு புகைப்படம் மட்டும் 8 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.