அரசியல்வாதிகள் என்றாலே ஒரு சிலர் மட்டும்தான் அனைவருக்கும் ஞாபகம் வருவார்கள். அப்படி தொண்டர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திமுகவின் தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியல் வருவதற்கு முன்பு சினிமாவில் பல படங்களுக்கு வசனங்களை எழுதிக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகுதான் அரசியலில் நுழைந்து பல்வேறு சாதனைகளை படைத்தார். கலைஞர் எப்போதுமே புத்தகங்களை மட்டும் தான் அதிகம் படிப்பதும் மீதி கிடைக்கும் நேரங்களில் எப்படி தனது கட்சியையும் தொண்டர்களையும் வழி நடத்துவது என்பதை பற்றி யோசிப்பார் என பலரும் கூறியுள்ளனர்.
ஒரு முறை கலைஞர் விழா ஒன்றிற்கு செல்லும் போது அந்த விழாவில் அலெக்ஸ் என்ற நபர் மேஜிக் செய்து காட்டுவதற்கு சம்மதம் வாங்கியுள்ளார். மேலும் கலைஞர் திரையை திறக்கும்போது மேஜிக் மூலம் அலெக்ஸ் என்பவர் கண்ணகி சிலையை வரவழைத்துள்ளார். இதனால் ஆச்சரியம் அடைந்த கலைஞர் அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.
பின்பு அலெக்ஸ் முதலமைச்சரின் அறைக்கு நேரடியாகவே சென்று இன்னும் நிறைய மேஜிக்குகள் எனக்கு தெரியும் உங்களிடம் செய்து காட்டலாம் என மீண்டும் கூறியுள்ளார். அப்போது அலெக்ஸ் ஒரு வெள்ளை பேப்பரை வைத்து மேஜிக் மூலம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் வந்துள்ளது. இதனை பார்த்துவிட்டு அவரிடம் கலைஞர் எனக்கு இந்த மேஜிக்கை சொல்லிக் கொடு என சிரித்தபடி கேட்டதாகவும் கூறியுள்ளார்.
பின்பு கலைஞரிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டபோது அப்போது பத்திரிகையில் நீங்கள் அதிகம் படிப்பது எதை என கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் கலைஞர் கிசுகிசுத்தான் முதலில் படிப்பேன் என கூறியுள்ளார். அதற்கு காரணம் யாரை பற்றி எழுதுகிறார்கள் எதற்காக எழுதுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே படிப்பார் என முன்னால் சினிமா செய்திதொடர்பாளர் விஜயமுரளி சித்ரா லக்ஷ்மனனுடன் நடந்த பேட்டியில் தெரிவித்தார்.