வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

TRP-யை உயர்த்த மீண்டும் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்கள்.. எதுல தெரியுமா?

சன் டிவி விஜய் டிவி எத்தனையோ சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும், ஹிந்தி டப் சீரியல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை. அதுவும், 2014 காலகட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு, உள்ளம் கொள்ளை போகுதடா, இனிய இரு மலர்கள் போன்ற சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது.

முன்பெல்லாம் பாலிமர் டிவி-யில் டப் செய்யப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வந்தனர். தற்போது, நியூஸ் சேனளாக மாறி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், சேனளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ஒரு சேனல், இதே அஸ்திரத்தை கைய்யில் எடுத்துள்ளது.

TRP-யை உயர்த்த ஹிந்தி சீரியல்கள்

நாம் சின்ன வயதிலிருக்கும்போது, பாலிமர் டிவி, கலர்ஸ் டிவி ஹிந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அதை பார்ப்பதற்காகவே வேகமாக ட்யூஷனில் இருந்து வந்த கதையெல்லாம் நடந்திருக்கும். என்னதான் ஒரு கட்சியை ஒரு வாரத்திற்கு இழுத்தாலும் காதல் கான்செப்ட்டை கையில் எடுத்து நம்மை கட்டி போட்டு விடுவார்கள்.

அப்படி பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒரு ட்ரீட்டை கொடுத்துள்ளது கலைஞர் டிவி. மிகவும் ஹிட்டான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம். உள்ளம் கொள்ளை போகுதடா, இனி எல்லாம் வசந்தமே போன்ற டப்பிங் தொடர்கள் மீண்டும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இரவு 9 மணிக்கு உள்ளம் கொள்ளை போகுதடாவும், இரவு 9.30 மணிக்கு இனி எல்லாம் வசந்தமே தொடரும் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இது இல்லத்தரசிகளை உற்ச்சாக படுத்தியுள்ளது.

Trending News