தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கென்று தனி ஓடிடி தளங்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது. கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் கூட ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டன. இதற்கு பல எதிர்ப்பு இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்கவே செய்தனர்.
தற்போது இந்தியாவில் ஒடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களான சன் டிவி சன் நெக்ஸ்ட் என்ற ஓடிடி தளத்தையும், விஜய் டிவி ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தையும், ஜீ தமிழ் தொலைக்காட்சி ஜீ 5 என்ற ஓடிடி தளத்தையும் வைத்துள்ளனர்.
தற்போது கலைஞர் தொலைக்காட்சியும் தனக்கென தனி ஓடிடி தளத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு பிரச்சனை வராத மாதிரி புது படங்கள்தான் நிறைய எடுப்பார்களாம்.
அதிலும் பல வசதிகளுடன் இந்த ஒடிடி தளம் இருக்குமாம். அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் இரண்டையும் ஒப்பிட்டு நம் மக்களுக்கு ஈசியா பயன்படும் அளவு இருக்க வாய்ப்பிருக்கிறது. வட இந்திய தளமான ஜீ, ஜியோ, மற்றும் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் ஆகியவைக்கு இனி ஆப்புதான். இனி அனைத்து தமிழ் படமும் தமிழ் ஒடிடியில் மட்டுமே.
தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் ஓடிடி தளங்களும் பிஸியாகவே உள்ளன. தற்போது கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ஓடிடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடியால் தியேட்டர் உரிமையாளருக்குதான் பெரும் தலைவலி. ஆனால் இந்த ஒடிடி கலைஞர் உருவாக்கியது. இனி கேள்வி கேட்க முடியுமா?