ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாக்கு அடித்த ஜாக்பாட்.. அதுவும் தேசிய விருது இயக்குனர் என்றால் சும்மாவா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அனைத்து படங்களும் மாறுபட்ட கதை களங்களை கொண்டிருந்ததால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள ஜிவி பிரகாஷை வைத்து வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் வெளிவராமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

கைதி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ் வைத்த இயக்குனர் வசந்தபாலன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் சார்பட்டா பரம்பரை நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்தின் முதல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் தற்போது அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகர் பாவா லக்ஷ்மணன் இருவரும் இணைந்துள்ளதாக படக்குழுவினவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா தமிழில் கலகலப்பு 2, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

rio-nisha-cinemapettai
rio-nisha-cinemapettai

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நிஷா முன்னணி இயக்குனரின் படத்தில் நடிப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அறந்தாங்கி நிஷாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Trending News