செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி ரசிகனாக உச்சகட்ட சந்தோஷத்தில் கலாநிதி மாறன்.. நெல்சனுக்காக தயாராகும் பல கோடி மதிப்பிலான பரிசு

Kalanadhi Maran: திரும்புகிற இடமெல்லாம் காதில் ஒலித்துக் கொண்டிருப்பது ஜெயிலர் படத்தின் வெற்றிதான். இப்படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னதாகவே பல அலப்பறைகளை கூட்டி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. அந்த வகையில் இப்படம் வெளிவந்த போதும் இதைப்பற்றி பேச்சுக்கள் தான் தொடர்ந்து வருகிறது.

மேலும் இப்படத்தின் வெற்றியை ஒவ்வொருவரும் தன்னுடைய வெற்றியாக பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் கலாநிதி மாறன் நினைத்ததை விட இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய சந்தோசம், வெற்றி போன்ற பல விஷயங்கள் இதில் கிடைத்து இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Also read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

அதுவும் ரஜினி ரசிகனாக இருப்பதால் இவருடைய சந்தோசத்தை சொல்ல முடியாத அளவிற்கு திக்குமுக்காடி வருகிறார். அந்த அளவிற்கு இப்படம் கலாநிதி மாறனுக்கு மிகப் பொக்கிஷமாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் இயக்குனருக்கு ஒரு காரை பரிசாக அளிப்பது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்.

அந்த வகையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு, கலாநிதி மாறன் ஒரு காரை வித்தியாசமான முறையில் பரிசளிக்க போகிறார். அது என்னவென்றால் பல கோடி மதிப்பில் உள்ள 8 காரின் பெயர்களை நெல்சனுக்கு அனுப்பியிருக்கிறார். இதில் எந்த கார் உங்களுக்கு வேண்டுமோ அந்த காரின் பெயரை சொல்லுங்கள் நான் உங்களுக்கு பரிசாக கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: கலாநிதியை உச்சி குளிர வைத்த நெல்சன்.. விட்டதைப் பிடித்த சன் பிக்சர்ஸ்

இதை கேட்டதும் நெல்சன் மிகவும் சந்தோஷத்தில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த வகையில் நெல்சன் கலாநிதி சொன்ன அந்த 8 காரையும் டெஸ்ட் டிரைவ் பண்ணி பார்த்திருக்கிறார். இதிலிருந்து அவருக்கு பிடித்த ஒரு காரை தேர்ந்தெடுக்கப் போகிறார் . இதனைத் தொடர்ந்து என்ன கலர் வேண்டும் என்று தேர்வு செய்தால் உடனே நெல்சன் வீட்டு முன்னாடி , காரை நிறுத்தி விடுவார் கலாநிதி மாறன்.

பல வருடங்களாக ரஜினி படம் இந்த மாதிரி ஒரு வெற்றியை பெற்று சாதனை செய்யவில்லை. ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் திருவிழா மாதிரி ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதனால் ரஜினியின் ரசிகராக கலாநிதி மாறன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதனை தொடர்ந்து இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

Also read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்த படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News