வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜெயிலர் அலை ஓய்ந்தும் மாறனுக்கு வாரி கொடுத்த ரஜினி.. தலைகீழாக நின்னாலும் தொடக்கூட முடியாத டிஆர்பி

Jailer-Rajini: நெல்சன், ரஜினியின் கூட்டணியில் ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு எப்படி இருக்குமோ என்ற பதட்ட நிலையில் இருந்த நிலையில் ஜெயிலர் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்னதாக செய்த வசூலை முறியடித்து கிட்டத்தட்ட 650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் படக்குழு ஆகியோருக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசுகளை வாரி வழங்கி இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான லியோ படம் ஜெயிலர் வசூலை முறியடித்து விடும் என்று பல சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். ஆனால் இப்போது 600 கோடியை நெருங்கவே திணறி வருகிறது.

Also Read : சிகரெட் பிடிப்பதில் ரஜினியை மிஞ்சிய 5 ஹீரோயின்கள்.. போட்டோவுடன் சிக்கிய நயன்

இந்த சூழலில் ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியான நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சியை பொறுத்தவரையில் அதன் டிஆர்பிஐ வைத்து தான் எந்த நிகழ்ச்சி அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவார்கள். சன் டிவியில் டெய்லர் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில் தீபாவளி ரேஸில் ஜெயிலர் படம் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமா தொலைக்காட்சி வரலாற்றிலேயே 8.29 டிஆர்பிஐ பெற்றிருக்கிறது. இப்போது ஜெயிலர் அலை ஓய்ந்த பின்பும் தனது தொலைக்காட்சி மூலம் கலாநிதி இந்த படத்தை வெளியிட்டு பெத்த லாபம் பார்த்திருக்கிறார்.

மேலும் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஜெயிலர் செய்த சாதனையை தலைகீழாக நின்றாலும் இன்னும் பத்து வருடங்களுக்கு யாராலும் இதை முறியடிக்க முடியாது என்று பேசப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் கிட்டத்தட்ட சன் டிவியில் ஒளிபரப்பான போது நல்ல டிஆர்பிஐ பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரஜினியின் வாரிசால் பெரும் சிக்கலில் சிவகார்த்திகேயன்.. துரத்தி துரத்தி அடிக்கும் ஏழரை

Trending News