ஜூலை 26 தனுஷ் நடிப்பில் 50வது படமாக ராயன் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் ஓபனிங் போல் வேண்டும் என தனுஷ் ஆசைப்படுகிறார். இது என்னுடைய ஐம்பதாவது படம் அதனால் ரசிகர்களும், மக்களும் இதனை கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
இந்த படத்தை தனுஷ் தான் இயக்கியுள்ளார். ஏற்கனவே அவர் இயக்கிய “பா பாண்டி” படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. இதுபோக “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். அப்பா கஸ்தூரிராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் பக்கபலமாக இருக்கிறார்கள்.
ராயன் படம் அண்ணன் தம்பி கதையை எடுத்துக் கூறும் கேங்ஸ்டர் படம் என்கிறார்கள். இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள். சந்திப் கிஷான், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் என ஒரு பெரிய நடிகர் கூட்டமே நடித்துள்ளனர்.
சமீபத்தில் சென்சார் சென்ற ராயன் படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். படத்தில் வன்முறைகளும், வசனங்களும் எல்லை மீறி இருப்பதால் இப்படி சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை மூன்று முறை பார்த்து உள்ளார்.
அக்கரப்பட்ட தனுஷும் அடித்த அந்தர் பல்டி
அவ்வளவு இயல்பாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது படத்தில் சர்டிபிகேட்காக எதையும் கட் செய்ய வேண்டாம், அப்படியே ரிலீஸ் செய்யலாம் என உத்தரவு போட்டு இருக்கிறார். தனுஷ் கூட சில காட்சிகளை ஒதுக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் கலாநிதி மாறன் ஒத்துக்கவில்லையாம்.
சேட்டிலைட் உரிமைகளையும் சன் பிக்சர்ஸ் தான் வாங்கி உள்ளது, அதனால் படம் ரிலீசான பிறகு சேட்டிலைட்க்கு வரும் பொழுது மற்றொரு முறை சென்சருக்கு அனுப்பி யூ சர்டிபிகேட் வாங்கலாம் என முடிவு செய்துள்ளார் கலாநிதி மாறன்.
- சன் டிவி கலாநிதி மாறன் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆயிட்டு
- கலாநிதி மாறன் வைத்த பொறியில் சிக்கிய லோகி
- சும்மா இருக்கும் விஜய்யை சொறிஞ்சு விடும் கலாநிதி மாறன்