மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் காளிதாஸ் ஜெயராம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் வெப் தொடரில் திரு நங்கை கேரக்டரில் நடித்தார். அது எல்லோருடைய பாராட்டையும் பெற்றது.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.
அவர் தன் நீண்ட நாள் காதலியும் மாடல் அழகியுமான தாரிணி காளிங்கராயரை நேற்று திருமணம் செய்துகொண்டர்.
இருவரின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். 2023- ம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்ததது.
ஓராண்டு கழித்து, டிசம்பர் 8 ஆம் தேதி, கேரளாவில் உள்ள குருவாயூர் கோவியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில், காளிதாஸ் ஜெயராம் இவப்பு நிற வேஷ்டி, தங்க ஜரிகையுடன், துண்டும் அணிந்திருந்தார். மணமகள் தாரிணி தங்க நிற எம்பிராய்டிங் செய்யப்பட்ட சிவப்பு கலர் சேலையும், துளசி மாலையும் அணிந்திருந்தார்.
இத்திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தாரிணி ஊத்துக்குளி ஜமீன் வாரிசு என்று கூறப்படுகிறது.
ஒரு நிகழ்ச்சியின் சந்தித்துக் கொண்ட காளிதாஸுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.