ஜெயராம் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார்.
ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரணியை காதலித்து வந்தார்.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
அதை அடுத்து சில தினங்களுக்கு முன் இந்த ஜோடியின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்தது.
பெரிய ஹீரோவின் மகனுக்கு சிம்பிளாக நடந்த இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதை அடுத்து தற்போது இவர்களின் ரிசப்ஷன் நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
அதில் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகள் மகனுடன் கலந்து கொண்டார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.