Kalki 2898 AD Twitter Review: உலக அளவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கல்கி 2898 AD இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் இன்னும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வைஜெயந்தி மூவிஸ் 600 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்தின் பிரீ புக்கிங் பெரும் சாதனை படைத்தது. அதனாலேயே படத்தின் முதல் நாள் வசூல் நூறு கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒட்டுமொத்த ஆடியன்ஸின் கருத்தும் படம் வேற லெவலில் இருக்கிறது என்பதுதான்.
கல்கி ட்விட்டர் விமர்சனம்
அதில் பிரபாஸுக்கு கொடுக்கப்பட்ட இன்ட்ரோ காட்சிகள், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் என அனைத்தும் அனல் பறக்கிறது. அதே போல் பிளாஷ்பேக்கில் வரும் புராண கதையும் சிறப்பாக மேக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் சயின்ஸ் ஃபிக்ஷன் பகுதி மட்டும் கொஞ்சம் குறையாக இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி ஹாலிவுட் தரத்தில் இருக்கும் விஷுவல் காட்சிகள் பிரம்மாண்டத்தை வாரி இறைத்துள்ளது.
அதனால படத்தை தாராளமாக பார்த்து ரசிக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி இப்படம் கிட்டத்தட்ட நான்கு வருட உழைப்பாகும். அதனால் சில சஸ்பென்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர வேண்டாம் என தயாரிப்பு தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏனென்றால் கஷ்டப்பட்டு பணத்தை கொட்டி படம் எடுத்து வெளியிட்டால் சில இணைய கூலிப்படைகள் அதை தவறாக விமர்சனம் செய்து விடுகின்றனர். இதுவே சில நல்ல படங்களின் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. அந்த வகையில் கலக்கலாக வெளிவந்திருக்கும் கல்கி வசூலிலும் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்டமாக வெளியான கல்கி வெற்றியா.?
- கல்கி அவதாரம் எடுத்த பிரபாஸுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்
- 600 கோடி பட்ஜெட்டில் தல தப்புமா கல்கி.?
- ஏலியன் தோற்றத்தில் கமல் மிரட்டும் கல்கி ட்ரெய்லர்