Kalki: நாக அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பலர் நடிப்பில் கல்கி உருவாகி இருக்கிறது சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளிவந்து எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஜோராக நடந்து வருகிறது. இதில் ஒட்டுமொத்த பிரபலங்களும் கலந்து கொண்டு படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஹீரோ பாணியில் எடுக்கப்பட்டுள்ள படம் இரண்டு பாகங்களாக வர இருக்கிறது அதில் கமல் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் இந்நிலையில் படத்தின் மொத்த நீளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி இனி படம் 3 மணி 56 நொடிகள் நீளம் கொண்டதாக இருக்கிறது அதில் முதல் பாகம் 1 மணி 33 நிமிடங்கள் 24 நொடிகள் மற்றும் இரண்டாம் பாகம் 1 மணி 27 நிமிடங்கள் 32 நொடிகள் ஓடக்கூடியதாக உள்ளது.
கல்கி படத்தின் அதிகபட்ச நீளம்
பொதுவாக இதுபோல் அதிக நீளம் கொண்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதில்லை அரிதிலும் அரிதாக தான் சில படங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது ஏனென்றால் அதிக நீளம் படத்தின் சுவாரசியத்தை குறைத்து விடுகிறது.
இதற்கு உதாரணமாக எத்தனையோ படங்களை சொல்லலாம் அப்படி இருக்கும்போது கல்கி படத்தின் நீளம் அதிகமாக இருப்பது சிறு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது ஏனென்றால் இதன் பட்ஜெட் மட்டுமே 600 கோடி ஆகும்.
தற்போது படத்தின் பிரீ பிசினஸ் வியாபாரமே 350 கோடியாக இருக்கிறது. அது மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இது படம் பிரமாண்டமாக வெளியாகிறது அந்த வகையில் அமெரிக்காவில் 55 ஆயிரத்திற்கும் மேல் இப்படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
அதேபோல் படத்தின் முதல் நாள் வசூலே இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.. அப்படி மட்டும் இருந்தால் கல்கி உலக அளவில் சாதனை பெற்ற படமாக இருக்கும். ஆனாலும் படத்தின் நீளம் கல்கி தலை தப்புமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.