கமல் இந்தியன் 2 படத்திற்கு பிரமோஷன் செய்கிறாரோ இல்லையோ, அப்போ அப்போ கல்கி படத்தையும் பற்றி மேடையில் பேசி வருகிறார். பிரபாஸ் ஹீரோவாக கமல் வில்லனாக நடித்து வெளிவர காத்திருக்கும் படம் கல்கி. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.
சுமார் 750 கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படம் கல்கி. வரப்போகும் 2898 காலகட்டங்களில் உலகமும் உலக மக்களும் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்லும் படமாக தான் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
முற்றிலுமாக எடுத்து முடிக்கப்பட்ட கல்கி படத்தை ஆந்திராவில் சில விநியோகஸ்தர்களுக்கு பிரிவியூ ஷோ போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் ஆஹா ஓஹோ என பாராட்டியுள்ளனர். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என விநியோகஸ்தர்கள் அனைவரும் படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகிறார்கள்.
ஆந்திராவில் அவ்வளவு போட்டிகள் நடைபெறும் பொழுது, தமிழ்நாட்டில் யாரும் வாங்குவதற்கு முன் வரவில்லை. இங்கே உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் முக்கால்வாசி படத்தை விநியோகம் செய்கிறார்கள். அதனால் கமல் அவர்களையே சிபாரிசு செய்து மலை போல் நம்பி இருக்கிறார்.
உதயநிதி பங்கிற்கு வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல்
ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை பொருத்தவரை அவர்கள் முன்பணம் கொடுத்து எந்த ஒரு படத்தையும் வாங்க மாட்டார்கள். படத்தை விநியோகம் செய்து, வரும் லாபத்தில் சரியான பங்கு கொடுப்பார்கள் . ஆனால் கல்கி படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத், இந்தப் படத்தை நாங்கள் 750 கோடிகள் போட்டு எடுத்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு முன்பணமாக பெரும் தொகைவேண்டும் என கறாராக கூறிவிட்டார்.
கமல் தான் இந்த படத்தை உதயநிதிக்காக சிபாரிசு செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுத்து வாங்குவதற்கு முன் வரவில்லை. தயாரிப்பாளர் அஸ்வினி தத் சொன்னதற்காக வெறும் 2 கோடிகள் மட்டுமே கொடுத்திருக்கிறது உதயநிதி தரப்பு. இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் கோபத்தில் உதயநிதியை திட்டி தீர்த்து படம் கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.
- தொடக்கதிலேயே வாரி சுருட்டி ஏப்பம் விடும் உதயநிதி
- ஓசியிலேயே மங்களம் பாடும் உதயநிதிக்கு கமல் வைக்கும் செக்
- செல்லப் பிள்ளைக்கு இந்தியன் 2-வை வாரி வழங்கிய ரெட் ஜெயன்ட்