TVK Thalapathy: நேற்றும் இன்றும் தமிழ்நாட்டையே உலுக்கி வரும் மிகப்பெரிய பிரச்சினை கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தான். சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது வரை மொத்தமாக 116 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது இப்பொழுது மட்டுமல்ல கடந்த வருடமும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்த நிலையில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது ஒரு வாரத்திலேயே முடங்கிப் போன விஷயமாக பார்க்கப்பட்டதால் தற்போது இந்த ஆண்டும் கொழுந்துவிட்டு எரிந்து இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் அரசாங்கத்தின் அலட்சியம் தான் என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தளபதி
அதே மாதிரி தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பாக தளபதி விஜய் அவர்கள் முதன்முறையாக அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். இது சம்பந்தமான விஷயங்களை தண்டிக்கும் விதமாக காலையில் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறும் வகையில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக அதிகரித்திருப்பது மிக வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று தளபதி விஜய் பதிவிட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஊருக்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆறுதல் கூற போகிறார். ஆனாலும் இனி இது போன்ற விஷயங்கள் நடக்காதவாறு அரசாங்கம் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இனி தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தளபதி மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க பயணத்தை தொடங்கிவிட்டார்.