வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சைலென்ட்டாக திருமணத்தை முடித்த கல்யாணி ப்ரியதர்ஷன்? யாருப்பா அந்த மாப்பிள்ளை

கல்யாணி பிரியதர்ஷனின் பெற்றோர்கள் என்னதான் மலையாள சினிமாவின் ஸ்டார்களாக இருந்தாலும் வேற்று மொழிகளில் நான்கு படங்களில் நடித்த பின்னரே மலையாளத்தில் கால் பதித்தார் கல்யாணி. தற்போது, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

குறிப்பாக, இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் முலம் நன்கு புகழ் பெற்றார். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சைலென்ட்டாக திருமணத்தை முடித்திருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் உடைந்தே போயி விட்டார்கள். மேலும் அந்த சின்னத்திரை நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதே, அப்போது இது இரண்டாவது திருமணமா என்ற கேள்வியும் எழுந்தது..

பரவிய தகவல் உண்மை தானா?

இந்த நிலையில், இந்த விடீயோவின் உண்மை தன்மை பற்றி ஆராய துவங்கினார்கள் ரசிகர்கள். அப்போது தான் தெரிய வந்தது. பரவி வரும் வீடியோ ஒரு விளம்பரப்படத்திற்காக படமாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ‘யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன்ஸ்’ என்ற ஒரு நகைக் கடையின் விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமைப் பொறுத்தவரை ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனது கல்லூரி தோழியான வந்திதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியர் தற்போது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதை பார்த்த பின்பு தான், ‘ஹப்பாடா’ என்று ரசிகர்கள் பெருமூச்சு விட துவங்கியுள்ளார்.

Trending News